கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு முட்டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை - 1
- கற்றாழை ஜெல் - 5 ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் முட்டை, கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்ட்டை முடி மற்றும் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அதன் பிறகு, மென்மையான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை - 1
- தயிர் - 2 ஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் முட்டை, தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின், இந்த கலவையை முடி, வேர்களில் தடவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம்.
3. தேவையான பொருட்கள்
- முட்டை - 1
- வாழைப்பழம்- 1
- பால் - 2 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை முடி மற்றும் வேர்களில் தடவி 1 மணி நேரம் வைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த மாஸ்க் முடியை பளபளப்பாக வைப்பதுடன், முடியை வலுவாக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |