குழந்தைகள் விரும்பி உண்ணும் ஈவினிங் ஸ்னாக்ஸ் Egg lollipop: எப்படி செய்வது?
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.
மேலும் முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
இந்த முட்டையில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய அட்டகாசமான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் முட்டை லாலிபாப் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 5
- எண்ணெய்- தேவையான அளவு
- மல்லி இலை- 1 கைப்பிடி
- இஞ்சி- 1 சிறிய துண்டு
- பூண்டு- 4
- பச்சைமிளகாய்- 2
- வெங்காயம்- 1
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
- மைதா- 2 ஸ்பூன்
- சோள மாவு- 2 ஸ்பூன்
- பிரட் தூள்- தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டையை வேகவைத்து அதன் ஓட்டை உரித்து அதனை துருவிக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் பொறிக்க தேவயான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு சூடு ஆக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டை நறுக்கிய மல்லி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்க்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மைதா சேர்த்து நன்கு பிணைந்து உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு சின்ன பாத்திரத்தில் சோளமாவை தண்ணீர் ஊற்றி கரைத்து, பிடித்த உருண்டையை சோளமாவு கரைத்த தண்ணீரில் நனைத்து பிரட் தூள்களில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து எடுத்துவைத்துள்ள உருண்டையை காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
உருண்டையில் லாலிபாப் குச்சியை சொருகி பரிமாறினால் சுவையான ஈவினிங் ஸ்னாக்ஸ் முட்டை லாலிபாப் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |