மீந்துபோன பொரியில் இப்படி சுவையான அல்வா செஞ்சி சாப்பிடுங்க
வீட்டில் பண்டிகைக்கு வாங்கிய பொரி மீந்துபோய் வீணாக்குவதற்கு பதிலாக அதில் அல்வா செஞ்சி சாப்பிடலாம்.
இதுவரைக்கும் கோதுமை மாவு முதல் வாழை இலை வரை அனைத்திலும் அல்வா செய்த்து சாப்பிட்டுருப்போம்.
தற்போது பொரியல் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி பொரி - 3 கப்
- வெல்லம் - 1 கப்
- நெய் - 5 ஸ்பூன்
- முந்திரி - 15
- ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொரி மற்றும் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊறவிடுங்கள்.
வெல்லத்தை பாகுகாய்ச்சி தூசி இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பொரியைச் சேர்த்து அதோடு வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஏலக்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதே கடாயில் ஒன்றரை ஸ்பூன் அளவு நெய் விட்டு சூடானதும், அரைத்து வைத்திருக்கும் பொரி, வெல்லக்கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு மெதுவாகக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு சுருண்டு வெந்து வர ஆரம்பிக்கும்.
நெய்யை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு அல்வா பதத்துக்கு வந்ததும் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்தால் சுவையான அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |