சிட்னியில் இந்திய குடும்பம் மீது முட்டை வீச்சு: இணையத்தில் வெடித்த விவாதம்
Egg-Throwing Against Indian Family in Sydney: அவுஸ்திரேலியாவில் இந்திய குடும்பம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடும்பத்தினர் மீது முட்டை வீச்சு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் அஞ்சலி சர்மா என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகிர்ந்த வீடியோ, தான் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது கண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை விவரித்துள்ளார்.
அதில், சாலையோர உணவு வண்டி அருகே பெரியவர் உட்பட இந்திய குடும்பம் ஒன்று உணவு அருந்தி கொண்டிருந்த போது அந்த வந்த யூட்(UTE) ரக வாகனம் ஒன்று தன்னுடைய வேகத்தை குறைத்து அந்த குடும்பத்தினரின் மீது முட்டைகளை வீசி சென்றதாக தெரிவித்துள்ளார்.
இது இனவெறி என்றோ அல்லது இந்தியர்கள் மீதான வெறுப்பு என்றோ எப்படி வேண்டும் என்றாலும் அழைக்கலாம். ஆனால் இந்த சம்பவம் எனக்கு மிகவும் மனவேதனை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பம் யாருக்கும் தொந்தரவு இன்றி தங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்ட போதிலும், நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகமே என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இருவேறு விவாதங்கள் எழுந்துள்ளன.