நீதிமன்ற தடையை மீறி., 5 டன் வெடிபொருட்களை தகர்க்க அமெரிக்க ராணுவம் திட்டம்
US army plan to Detonate Explosives in Iowa: நீதிமன்றத் தடையை மீறி, அயோவாவில் 5 டன் வெடிபொருட்களை தகர்க்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
வெடிபொருட்களை தகர்க்க அமெரிக்க ராணுவம் திட்டம்
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நிலை தன்மையற்ற 5 டன் வெடிபொருட்களை வெடிக்க செய்து கட்டுப்படுத்தப்பட்ட அழிக்கும் நடவடிக்கைக்கு கூட்டாட்சி நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து இருந்தது.
நீதிமன்றம் தடை விதித்து இருந்த போதிலும், வெடிப்பொருட்களை அழிக்கும் திட்டத்தை முன்னெடுத்து செல்ல அமெரிக்க ராணுவம் தீர்மானித்துள்ளது.
சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அவசரகால விலக்கு விதியின் கீழ் வெடிபொருட்களை நவம்பர் 24ம் திகதி அழிக்கும் பணியை அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ராணுவ தளத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக மிடில்டவுனில் உள்ள அயோவா ராணுவ வெடிமருந்து ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த இந்த வெடி தகர்ப்பு நடவடிக்கையை எதிர்த்து சுற்றுச்சூழல் அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கில் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பான மாற்று வழிகளை ஆராய தவறி விட்டதாக தெரிவித்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.