முட்டையின் மஞ்சள் கரு: ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?
முட்டையை விரும்பி உண்பவர்கள் நம்மிடையே அதிகம். இது ஆரோக்கியத்திற்கு பல நன்மையை வழங்கி வருகிறது. ஆனால் சிலர் முழு முட்டையை சாப்பிடாமல், முட்டையின் மஞ்சள் கருவை தனியாக சாப்பிடுவார்கள்.
முட்டையின் மஞ்சள் கரு உடலுக்கு நன்மை செய்யாது என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு பல வகையில் உடலுக்கும் நன்மையை வழங்குகிறது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முட்டையின் மஞ்சள் கரு தீங்கு விளைவிப்பதா?
முட்டையின் வெள்ளைக்கருவில் அதிக அளவு புரதம், செலினியம் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் முக்கியம்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலமாகும்.
முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ளதை விட பல மடங்கு புரதச்சத்து முட்டையின் மஞ்சள் கருவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அனைவரும் முழு முட்டைகளை சாப்பிட வேண்டும். இது சீரான அளவு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
நீங்கள் மஞ்சள் கரு இருக்கு பகுதியை சாப்பிடாமல் விட்டால் அதில் உள்ள ஊட்டசத்துகளை இழக்க நேரிட வேண்டி இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |