முட்டை விற்று ரூ.100 கோடிக்கு அதிபதிகளான 3 நண்பர்கள்.., யார் அவர்கள்?
முட்டை விற்பனைக்கு என தனி பிராண்டை உருவாக்கி, தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ள மூன்று நண்பர்களை பற்று தான் பார்க்க போகிறோம்.
யார் அவர்கள்?
இந்திய மாநிலமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் நெகி, உத்தம் குமார் மற்றும் ஆதித்யா சிங் (Abhishek Negi, Uttam Kumar, Aditya Singh) ஆகிய 3 நண்பர்கள் இணைந்து EGGOZ என்னும் நிறுவனத்தை உருவாக்கினர்.
இந்த நிறுவனத்தில் இயற்கை தீவனங்கள் மூலம் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ரூ.100 கோடி லாபத்தை பெறுகிறது.
இது தொடர்பாக அபிஷேக் நெகி அளித்த பேட்டி ஒன்றில், "இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் முட்டைகளுக்கான தேவை அதிகரித்து கொண்ட வருகிறது. அதாவது, ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் இந்தியாவில் முட்டை நுகர்வு இரண்டு மடங்குகளாக இருக்கிறது இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து நிறுவனத்தை உருவாக்கினோம்.
பால் என்றால் அமுல் என்று எப்படி நியாபகத்திற்கு வருகிறதோ, அதே போல முட்டை என்றால் EGGOZ என்று நினைவுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே உருவாக்கினோம்" என்றார்.
Zero Net Worth பற்றி தெரியுமா? அனில் அம்பானி, Byju ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது இப்படி தான்!
இந்த நிறுவனத்தில் உள்ள முட்டையில் உள்ள மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆரஞ்சு நிற கரு உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்து தன்மை மஞ்சளை விட அதிகமாக இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இவர்கள் மூவரும் இணைந்து 2020 -ம் ஆண்டு பீகாரில் கோழி பண்ணை நடத்தி வந்தனர். கொரோனா காலத்தில் இவர்களின் வங்கி பணம் பூஜ்ஜியமாக இருந்த நிலையிலும், தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளனர்.
இவர்கள் நிறுவனத்தில் உள்ள முட்டையை Zepto, Big Basket, Instamart, Amazon, Flipkart போன்ற தளங்களில் வாங்க முடியும். அதோடு, நேரடியாக சென்றும் வாங்கலாம். 6 முட்டை இருக்கும் ஒரு பெட்டியானது ரூ.77 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |