முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் முட்டை ஓடு.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க முட்டை ஓடை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை ஓடு- 1
- தேங்காய் எண்ணெய்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் முட்டை ஓடுகளை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் முட்டை ஓடு பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து இந்த கலவையை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை ஓடு- 1
- ஆலிவ் எண்ணெய்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெயுடன் மற்றும் முட்டை ஓடு பொடியை சேர்க்கவும்.
பின் இதனை நன்றாக கலந்து உச்சந்தலையில் 5-10 நிமிடங்களுக்கு நன்கு தடவவும்.
30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு அதன் பிறகு மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை கழுவிகொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |