3,500 ஆண்டுகள் பழமையான மம்மி.. 35 வயதில் உயிரிழந்த மன்னன்! வியக்க வைக்கும் தகவல்
எகிப்தில் அரச வம்சாவளியை சேர்ந்த 3,500 ஆண்டு பழமையான மம்மி ஒன்றின் புதிர்கள் டிஜிட்டல் முறையில் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
1881 ஆம் ஆண்டில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக எகிப்திய மன்னர் ஒருவரின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய விவரம் டிஜிட்டல் முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் கதிரியக்கவியல் பேராசிரியர் டிஜிட்டல் மம்மி ஆய்வு குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியின் கைத்தறித் துணியைக்கூட அகற்றாமல் அதன் அடையாளத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த மம்மி கி.மு 1525ஆம் ஆண்டிலிருந்து 1504ஆம் ஆண்டு வரை ஆண்ட பார்வோன் முதலாம் Amenhotep மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் என்பது உறுதியாகியுள்ளது. புதிய டிஜிட்டல் முறையின் மூலம் மம்மியை பற்றிய பல தகவல்கள் வெளி உலகுக்கு கிடைத்துள்ளன.
அவர் 35வது வயதில் உயிரிழந்ததும் அவரின் மூளை இன்றுவரை அவரது உடலுக்குள் இருப்பதும் தெரியவந்தது. அவரது மரணத்திற்கான காரணத்தை விளக்கும் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இவர் பல கோயில்களைக் கட்டி அமைதியான ஆட்சியை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. எகிப்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரகசியங்களைக் கண்டறிய இந்த புதிய தொழில்நுட்பம் மிக உதவியாக இருக்கும் என்பது நம்பப்படுகிறது.