மெஸ்ஸிக்காக..அநியாயமாக ஏமாற்றப்பட்டோம்: எகிப்து அணி பயிற்சியாளர்
தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எகிப்து அணி பயிற்சியாளர் ஹசன் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா வெற்றி
அட்லாண்டாவில் நடந்த FIFA கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் எகிப்து அணி வெளியேற, அர்ஜென்டினா காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. அர்ஜென்டினா 12 திகதி நடைபெற போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.
ஹோசம் ஹசன்
ஆனால், தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹசன் (Hossam Hassan) குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி. ஒரு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது, அது VAR மூலம் சரிபார்க்கப்படக்கூட இல்லை.
இரண்டாவது கோல் ஒன்று இரத்து செய்யப்பட்டது. ஒருவேளை நடப்பு உலக சாம்பியனை போட்டியில் தக்க வைக்கவோ அல்லது மெஸ்ஸி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியிருக்கலாம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |