பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பை பயங்கரவாத குழுவாக பட்டியலிட்ட நாடு
Egypt lists mab as extreme terror group: பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பு ஒன்றை, எகிப்து 'பயங்கரவாத குழு' என்று பட்டியலிட்டுள்ளது.
லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்குப் பின்னால் உள்ள பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பை, 'பயங்கரவாத குழு' என்று எகிப்து பட்டியலிட்டுள்ளது.
பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பு
பிரித்தானியாவில் பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பு (MAB), எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் அமைப்பானது, லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்குப் பின்னால் உள்ளதாகவும், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் குற்றவியல் நீதிமன்றத்தால், பிரிட்டிஷ் இஸ்லாமிய குழு எகிப்தின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ள 35 அமைப்புகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளாக அறிவிப்பு
இந்தப் பட்டியலில் பெயரிடப்பட்ட 36 நபர்களில், MAB-யின் இரண்டு முக்கிய பிரமுகர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
எகிப்து அரசால் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதிலும், பிரித்தானியாவில் இந்த அமைப்பின் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
MAB அமைப்பின் மூத்த தலைவர்களான டாக்டர் அனாஸ் அல்திக்ரிட்டி மற்றும் அகமது அல்-ராவி ஆகியோரும், இந்த வாரம் எகிப்தில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த அமைப்பு, 1997-யில் ஹமாஸின் முன்னாள் தலைவர் முகம்மது காதெம் சவால்ஹாவால் இணைந்து நிறுவப்பட்டது.
