ரஷ்ய கோதுமையை பெருமளவு வாங்கிக் குவிக்கும் அரேபிய நாடொன்று
எகிப்து அரசாங்கம் ரஷ்ய கோதுமையை பெருமளவு கொள்முதல் செய்துள்ளதாகவும், இந்த மாதம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
250,000 மெட்ரிக் டன் கோதுமை
ரஷ்யாவின் OZK குழுமம் இந்த ஏற்றுமதியை முன்னெடுக்க உள்ளது. நான்கு கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை, எகிப்து கொடியுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தக் கொள்முதல் அல்லது விலை தொடர்பில் தகவலேதும் வெளியாகாத நிலையில், ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களை குறிப்பிட்டு, மொத்தம் 250,000 மெட்ரிக் டன் கோதுமையாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளர்களில் ஒன்றான எகிப்து, சமீபத்திய மாதங்களில் அதன் தானிய இருப்புக்களை பராமரிப்பதில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
2024ல், தளவாடம் மற்றும் நிதி தடைகள் எகிப்து அரசாங்கத்தின் வழக்கமான இறக்குமதி நடவடிக்கைகளை சீர்குலைத்தன. இந்த நிலையில், எகிப்தின் திட்டமிடப்பட்ட கோதுமை இருப்பு நான்கு மாத உள்ளூர் நுகர்வுக்கு போதுமானது என்று அமைச்சரவை சமீபத்தில் கூறியது.
முக்கிய சப்ளையராக ரஷ்யா
மேலும், ஐரோப்பிய தானிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக எகிப்திய நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்துள்ள நிலையிலேயே ரஷ்ய கோதுமை ஏற்றுமதிக்கு தயாராவதாக தகவல் வெளியானது.
எகிப்துக்கு கோதுமையின் முக்கிய சப்ளையராக ரஷ்யா இருந்து வருகிறது, அரசு மற்றும் தனியார் துறை இறக்குமதிகளில் ஆதிக்கம் செலுத்தியும் வருகிறது.
வெளியான வர்த்தக தரவுகளின் அடிப்படையில், 2024ல் எகிப்து தோராயமாக 14.7 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்ததாகவும், அதில் 74.3 சதவீதம் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |