எகிப்தில் கோரமான பேருந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 28 பேர் படுகாயம்
Egypt South Sinai Bus Crash 16 Dead: எகிப்தின் தெற்கு சினாய் நகரில் நடந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பேருந்து விபத்து
எகிப்தின் தெற்கு சினாய்(Sinai) பகுதியில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் கிட்டத்தட்ட 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த பேருந்து விபத்தில் 28 பேர் வரை காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேருந்து விபத்தானது தாஹாப் - நுவைபா நெடுஞ்சாலையில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் ஆகியவற்றிக்கு தெற்கு சினாய் தீபகற்பமானது சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது.
தாஹாப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தங்க மணல் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை பெரும் அளவு கவர்ந்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |