FIFA உலகக்கிண்ணம்: எகிப்திய அணி வீரர்களுக்கு அமெரிக்க நகரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு
சியாட்டிலுக்குள் நுழைய மோ சலா மற்றும் அவரது எகிப்திய அணி வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் விவகாரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எகிப்தின் கோரிக்கை
ஞாயிறு இரவு வான்கூவரில் நியூசிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த பிறகு, ஆப்பிரிக்காவின் முன்னணி அணி விமானம் மூலம் சியாட்டில் நகரத்திற்கு வரத் திட்டமிட்டிருந்தது.

ஆனால், சியாட்டிலுக்கு நேரடியாகப் பறப்பதற்கான எகிப்தின் கோரிக்கையை உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் நிராகரித்தனர். அந்த அவமதிப்புக்குப் பிறகு, வாஷிங்டனின் ஸ்போகேனில் உள்ள தங்கள் பயிற்சித் தளத்திற்குத் திரும்ப அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து எகிப்து கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவிக்கையில், உலகக் கிண்ணம் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, திட்டமிட்டபடி சியாட்டில் நகருக்கு சென்று தங்குவதற்கான அணியின் கோரிக்கையை பாதுகாப்பு அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.
ஜூன் 26-ஆம் திகதி நடைபெறவுள்ள ஈரான் அணிக்கு எதிரான போட்டிக்கான தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பயணங்களால் வீரர்களுக்கு ஏற்படும் பயணச் சோர்வைத் தவிர்க்க, எகிப்து அணி நேரடியாக சியாட்டிலுக்குச் செல்ல விரும்பியது.
இருப்பினும், பாதுகாப்பு தொடர்பான முடிவைத் தொடர்ந்து, எகிப்து தேசிய அணிப் பிரதிநிதிகள் குழு ஸ்போகேனுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது என்றார்.
நாக்-அவுட் சுற்றில்
மோ சலா தலைமையிலான எகிப்திய அணி தங்கள் புள்ளிகளை நான்காக உயர்த்தியதன் மூலம், நாக்-அவுட் சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்வது குறித்து திட்டமிடுவார்கள்.

2025-26 சீசனின் முடிவில் சலா லிவர்பூல் அணியிலிருந்து விலகினார்; இதன் மூலம் ஆன்ஃபீல்டில் அவர் கொண்டிருந்த சிறப்பான ஒன்பது ஆண்டு காலப் பயணம் நிறைவுற்றது.
லிவர்பூல் அணிக்காக 257 கோல்களை அடித்து அசத்திய அவர், அந்த அணியின் வரலாற்றிலேயே அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்தார். முன்னாள் செல்சியா வீரரான இவர் சாம்பியன்ஸ் லீக் மற்றும் இரண்டு பிரீமியர் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |