கடவுளின் பெயரால், வெளியேறு... நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவர, இஸ்ரேலில் உடனடியாக பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Barak அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல், காசா சேற்றில் மூழ்கிவிடும்
பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், இஸ்ரேல் வரும் ஆண்டுகளில் காசா சேற்றில் மூழ்கிவிடும் என்றும் எஹுத் பராக் சாடியுள்ளார்.
Credit: Yossi Aloni/Flash90
இஸ்ரேலில் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்துள்ள எஹுத் பராக், பொதுமக்களால் பெரிதும் கொண்டாடப்படும் ராணுவ வீரராவார். தற்போது 81 வயதாகும் எஹுத் பராக் தெரிவிக்கையில்,
நெதன்யாகு ஆட்சியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் பதவி விலகுவதே முறை, தேர்தல் மட்டுமே காஸா போருக்கு தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 100 நாட்களைக் கடந்துள்ள ஒரு போரில் இருந்து இஸ்ரேல் தன்னைத் தானே வெளியேற்றிக் கொள்ள வேண்டிய நேரம் கடந்துவிட்டது என்றார் பராக்.
1940களில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பராக், கடவுளின் பெயரால், பதவியைவிட்டு வெளியேறு என்று நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் இன்றி, இரத்தக்களரியான, பழிவாங்கும் போரை நெதன்யாகு தொடர்கிறார் என பராக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Credit: dailymail
உண்மையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பொறுப்பேற்று நெதன்யாகு பதவி விலகியிருக்க வேண்டும், ஆனால் பதவி வெறி காரணமாக ஆட்சியில் தொடர்வதுடன், இஸ்ரேலை காஸா சேற்றில் சிக்க வைத்துவிட்டார் எனவும் பராக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலில் தேர்தல் வேண்டும்
ஹமாஸின் இராணுவத்தையும் ஆட்சியையும் அழிக்காமல் இஸ்ரேலால் வெற்றியை அறிவிக்க முடியாது. ஆனால் இந்த போரில் இருந்து ஹமாஸ் படைகள் தப்பித்தாலே அது அவர்களுக்கு வெற்றி தான்.
ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றாலும், ஹமாஸ் படைகள் மீண்டு வரும் என்றார். இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி தான், இஸ்ரேலில் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் பராக்.
@getty
2021ல் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட எஹுத் பராக், அப்படியான ஒரு கூட்டத்துடன் தற்போது நெதன்யாகு ஆட்சி நடத்துகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் நெதன்யாகுவின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளது. மட்டுமின்றி, ஆயுதங்களும் ஆதரவும் அளித்து வந்தாலும், மிகவும் துல்லியமான இராணுவ நடவடிக்கைகள் தேவை என அமெரிக்காவும் அழுத்தமளித்து வருகிறது.
@ap
அத்துடன் காஸா பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |