கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்

Qatar India
By Balamanuvelan Dec 08, 2023 06:13 AM GMT
Report

கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களை இந்திய தூதர் சென்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள்

கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து கத்தார் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல் | Eight Indians Sentenced To Death In Qatar

Image Courtesy: Reuters

திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

இந்நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சமீபத்திய தகவல்

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களையும், கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் இம்மாதம், அதாவது டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, சந்தித்ததாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான Arindam Bagchi, நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்தார்.

அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த நீதிமன்ற விசாரணை விரைவில் நடைபெற இருப்பதாக தெரிவித்த அவர், இந்தியா நடப்புகளை உற்று கவனித்துவருவதாகவும், தக்க சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான உதவிகளை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல் | Eight Indians Sentenced To Death In Qatar

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற COP28 உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கத்தார் எமிரான Amir Sheikh Tamim bin Hamad Al-Thaniயும் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.

கத்தார் எமிரிடம் இந்திய பிரதமர் இந்தியர்கள் மரணதண்டனை தொடர்பில் ஏதாவது விவாதித்தாரா என்பது தொடர்பான கேள்விக்கு Arindam Bagchi நேரடியாக பதிலளிக்கவில்லை.

மாறாக, அந்த சந்திப்பு தொடர்பாக மோடி எக்ஸில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றையே மேற்கோள் காட்டியுள்ளார் அவர். அந்த இடுகையில், நாங்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் கத்தார்வாழ் இந்தியர்கள் நலன் தொடர்பில் ஆக்கப்பூர்வமான உரையாடல் ஒன்றை மேற்கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US