கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்கள் விடுதலை... மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள்
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ள நிலையில், விடுவிக்கப்பட்டவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளதுடன், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன,
கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில், கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பீரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் என்னும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட விடயமே அவர்களுடையகுடும்பத்தினருக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது நாட்டையே அதிரவைத்தது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது. தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசின் முயற்சியால் அந்த எட்டுபேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை கத்தார் நீதிமன்றம் ஒன்று குறைத்திருந்தது.
எட்டு இந்தியர்களும் விடுதலை
இந்நிலையில், தற்போது அந்த எட்டு பேரும் கத்தார் அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். தாங்கள் விடுதலை செய்யப்பட்ட விவரமே அவர்களுக்கு தெரியாமலிருந்த நிலையில், நேற்று தூதரக அதிகாரிகள் அவர்களில் ஏழு பேரை விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்ப, அதிகாலை 2.00 மணியளவில் அவர்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்கள்.
#WATCH | Delhi: One of the Navy veterans who returned from Qatar says, "We waited almost for 18 months to be back in India. We are extremely grateful to the PM. It wouldn't have been possible without his personal intervention and his equation with Qatar. We are grateful to the… pic.twitter.com/5DiBC0yZPd
— ANI (@ANI) February 12, 2024
டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துகொண்டார்கள்.
இந்தியர்கள் எட்டு பேரையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் பத்திரமாக இந்தியா வந்து சேர உதவியதற்காக கத்தார் எமிருக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |