கேபிள் கார் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த சிறுவன்: வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இத்தாலியில், கேபிள் கார் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறி கொடுத்த 6 வயடித்து சிறுவனை, அவரது தாய்வழி தாத்தா இஸ்ரேலுக்கு கடத்திச் சென்ற நிலையில், இது தொடர்பான வழக்கில் இத்தாலிய நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த மே மாதம் 23-ஆம் திகதி, விட்சண்டே அன்று, வடக்கு இத்தாலியப் பகுதியான பீட்மாண்டில் கேபிள் காரின் கேபிள் அறுந்து விழுந்ததில், 50 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்து, அதிலிருந்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தகனார்.
இத்தாலியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில், Eitan Biran எனும் 6 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அனால், அந்த விபத்தில் அவன் தனது தாய்,தந்தை, சகோதரன், கொள்ளுத்தாத்தா மற்றும் கொள்ளுப்பாட்டி என மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்தார்.
Photo: action press
இந்த பயங்கரமான கேபிள் கார் விபத்து நடந்த 5 மாதங்களுக்குப் பிறகு, சிறுவன் ஈடனை அவரது தந்தைவழி தாத்தா Shmuel Peleg, அவரை ரகசியமாக சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்து தனியார் ஜெட் மூலம் இஸ்ரேலுக்கு தன்னுடன் கடத்திச் சென்றார்.
இந்த இடைப்பட்ட காலங்களில், சிறுவனின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பாசத்துடன் வளர்ந்துவந்த ஈடனின் சித்தி Aya Biran-Nirko (ஈடன் தாயின் சகோதரி) இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Photo: JACK GUEZ / AFP
இந்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது, அப்போது இத்தாலிய நீதிமன்றம் ஈடன் இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மேலும், குழந்தையை ஒரு தனியார் ஜெட் விமானத்தில் இஸ்ரேலுக்கு அழைத்துச்சென்ற அவரது தாத்தா ஷ்முவேல் பெலெக், நீதிமன்றச் செலவு 19,000 யூரோக்களை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இத்தாலியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Photo: JACK GUEZ / AFP

