தித்திக்கும் சுவையில் இளநீர் பாயசம்: எப்படி செய்வது?
பாயசம் சாப்பிடுவது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
இதுவரைக்கும் நாம் பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டிருப்போம்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் இளநீர் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1L
- இளநீர் வழுக்கை- 2 கப்
- தேங்காய் பால்- 2 கப்
- சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- முந்திரி- 20
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாதி இளநீர் வழுக்கையை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கெட்டியாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
கெட்டிப் பதத்திற்கு வந்ததும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கை மற்றும் அரைத்த சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவையனைத்தும் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள், தேங்காய் பாலை சேர்க்கவும்.
இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்தால் சுவையான இளநீர் பாயாசம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |