கொழும்பில் துப்பாக்கியுடன் சிக்கிய வயோதிபர்: மடக்கி பிடித்த பொலிஸார்
Sri Lanka
Government Of Sri Lanka
By Thiru
இலங்கையின் கொழும்பில் ரி - 56 ரக துப்பாக்கியுடன் சுற்றிய வயோதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கொழும்பு - கிராண்ட்பாஸ் ஜோசப் வீதி பகுதியில் நேற்று(24.12.2025) கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி
அவரிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
அதே சமயம் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US