71 வயதில் தோள்பட்டை வலி.., இருந்தாலும் CA தேர்வில் வெற்றியடைந்த முதியவர்
ராஜஸ்தானில் வங்கிப் பணியில் ஓய்வுபெற்ற 71 வயது முதியவர் சிஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
சிஏ தேர்வில் வெற்றி
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் பணிபுரிந்துள்ளார்.
பின்னர், கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2020-ம் ஆண்டு இவரது மனைவி உயிரிழந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி பகவத் கீதை உள்ளிட்ட நூல்களை படிக்க தொடங்கினார்.
இவரது பேத்தி இவரை பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வை எழுதுமாறு கூறியுள்ளார். அதற்காக 2021-ம் ஆண்டு பதிவு செய்துள்ளார்.
அதன்படி, 2022-ம் ஆண்டு மே மாதம் பவுண்டேஷன் தேர்விலும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து, இறுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால், மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு கடுமையான தோள்பட்டை வலி இருந்த போதிலும் தினமும் 10 மணி நேரம் படித்து சாதனை புரிந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |