தடுப்பூசி போட்டு 25 நிமிடங்களில் நிலைகுலைந்து சரிந்த முதியவர்: ஒவ்வாமை இல்லாதிருந்தும் உயிரிழந்த சோகம்
அமெரிக்காவில் ஒவ்வாமை பிரச்சினை இல்லாதிருந்தும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது 70 வயதுகளிலிருக்கும் அந்த முதியவர், நியூயார்க்கில் தடுப்பூசி மையம் ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கவனிப்பதற்காக, அவரை 15 நிமிடங்கள் அமரவைத்து அவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்தபின்னரே அவரை அனுப்பியிருக்கிறார்கள் அந்த மையத்தின் அலுவலர்கள்.
ஆனால், தடுப்பூசி போட்டு 25 நிமிடங்களில் மையத்திலிருந்து வெளியே வந்த அவர் நிலைகுலைந்து சரிந்திருக்கிறார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலும், அவர் உயிரிழந்துவிட்டார்.
அவருக்கு என்ன தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அந்த முதியவரைப் போலவே, கடந்த வார இறுதியில் Drene Keyes (58) என்னும் பெண்மணி பைசர் தடுப்பூசி போட்டு ஒரு நாளுக்குள் உயிரிழந்துள்ளார்.
சென்ற மாதம் Tim Zook (60) என்ற எக்ஸ் ரே டெக்னீஷியன், தனக்கு தடுப்பூசி போடப்பட்டதைக் குறித்து பெருமையாக பேஸ்புக்கில் செய்தி தெரிவித்திருந்தவர், பைசர் தடுப்பூசி போட்டு இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

