பிரித்தானியாவின் ஸ்ட்ரீதாமில் முதியவர் சடலமாக மீட்பு: கொலை வழக்கு பதிவு
பிரித்தானியாவில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலை விசாரணை தொடங்கியுள்ளது.
முதியவர் சடலமாக மீட்பு
தெற்கு லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பில் 85 வயது முதியவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில், ஸ்ட்ரீதாமில்(Streatham) உள்ள சர்ச்ச்மோர் சாலையில் (Churchmore Road) உள்ள ஒரு முகவரியில் ஒரு ஆண் காயங்களுடன் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பணியாளர்கள், அவரை காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக 36 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை விரைவில் நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணையை தலைமையேற்று நடத்தி வரும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் சாரா லீ (Sarah Lee), சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் முன்வந்து பொலிசாருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |