உலக நாடுகளின் தலைமை பொறுப்பில் பெண் தலைவர்கள்
உலகின் பல நாடுகளில் பெண்கள் தலைமை பொறுப்பை வகித்து வருகின்றனர்.
பெண் தலைமைகள்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி உலக மகளிர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், பாலின சமத்துவம், பெண்களின் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல நாடுகளின் தலைமை பதவியில் அமர்ந்து பெண்கள் நாட்டை வழிநடத்துகின்றனர்.
Giorgia Meloni
2022 ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் பிரதமர் பதவியில் இருக்கும் Giorgia Meloni, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், அதன்பிறகு பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது பிரதமராக உயர்ந்துள்ளார்.
தீவிர வலதுசாரி கட்சியான இத்தாலி சகோதரர்கள் கட்சியின் தலைவராக உள்ள Giorgia Meloni, போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் வலிமையான பெண்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
Giorgia Meloni இத்தாலியில் உள்ள சட்டவிரோத குடியேற்றம், பொருளாதார சீர்திருத்தம் ஆகியவற்றில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
Mette Frederiksen
டென்மார்க் நாட்டின் பிரதமராக 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் Mette Frederiksen. இவர் டென்மார்க்கின் 2வது பெண் பிரதமர் மட்டுமின்றி, அந்த நாட்டின் இள வயது பிரதமராக உள்ளார்.
2001 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதி தேர்தலில் வெற்றி பெற்ற அவர், 2010 ஆம் ஆண்டு அமைச்சர், 2019 -இல் பிரதமர் என படிப்படியாக தனது அரசியல் வாழ்க்கையில் உயர்ந்தார்.
மெட்டே ஃபிரடெரிக்சன், தனது இளமைக்காலத்திலே மழைக்காடுகளைப் பாதுகாத்தல், திமிங்கலங்களைப் பாதுகாத்தல், நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Kristrun Frostadottir
ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக தற்போது பெண்களே உள்ளனர். கடந்த 2024 ஆ,ம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் Kristrun Frostadottir.
ஊடகவியலாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு, 2021 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார். அடுத்த தேர்தலிலே வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதியாக Halla Tomasdottir பதவி வகித்து வருகிறார். இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்களின் விளைவுகள், சுற்றுலா மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பங்கு ஆகியவை குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Paetongtarn Shinawatra
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்து பிரதமராக Paetongtarn Shinawatra இருக்கிறார். இவர் தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra-வின் மகள் ஆவார். இவர் அந்நாட்டின் இளவயது பிரதமர் ஆவார்.
தாய்லாந்தின் மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்த Paetongtarn Shinawatra, கடந்த 2024 ஆம் ஆண்டு, தாய்லாந்து பிரதமராகபொறுப்பேற்று, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, ஆகிய துறைகளில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
Claudia Sheinbaum
கடந்த 2024 ஆம் ஆண்டு மெக்சிகோ அதிபராக தேர்வு செய்யப்பட்ட Claudia Sheinbaum, அந்நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார். அதற்கு முன்னதாக மெக்சிகோ நகர தலைவராக பணியாற்றினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிகிற்கு தடை விதிப்பது என பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.
Droupadi Murmu
2022 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட Droupadi Murmu இந்தியாவின் 2வது பெண் ஜனாதிபதி ஆவார். இந்தியாவின் பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதியான இவர், இந்த பதவியை வகிக்கும் இளைய நபர் ஆவார்.
அரசியலில் நுழையும் முன்னர், எழுத்தர் மற்றும் ஆசிரியராக பணியாற்றிய இவர், அதன் பிறகு ஒடிசா மாநில அரசில் அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
உலகளவில் பெண் தலைவர்கள்
இது போல் உலகின் பல்வேறு நாடுகளில் பெண்கள் பிரதமர்களாகவும், அதிபராகவும் உள்ளனர்.
தான்சானியா நாட்டின் அதிபராக 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்று வரும், Samia Suluhu Hassan, அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஜனாதிபதியாக 2023 ஆம் ஆண்டு Christine Kangaloo பொறுப்பேற்றார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல், காங்கோ, லாட்வியா, டோகோ ஆகிய நாடுகளில் பெண்கள் பிரதமர்களாகவும், வடக்கு மாசிடோனியா, டொமினிகா, மால்டா, ஸ்லோவேனியா, பெரு உள்ளிட நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாக உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |