No Driving License.., முழு சார்ஜில் 100 km தூரம் வரை செல்லும் Electric Scooter அறிமுகம்
இந்தியாவில் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மொடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Electric Scooter அறிமுகம்
ஜீலியோ (Zelio) நிறுவனமானது எக்ஸ்-மென் (X-Men) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மொடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
குறைந்த வேகத்தில் இயங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இது, லீட் ஆசிட் மற்றும் லித்தியம்-அயன் ஆகிய இரண்டு பேட்டரி விருப்பங்களை வழங்குகிறது. இது ஒவ்வொன்றும் இரண்டு திறன் கொண்டவையாகும்.
லீட் ஆசிட் பேட்டரி பேக் (Lead Acid Battery) தேர்வில் 60V 32AH மற்றும் 72V 32AH என்கிற இரண்டு வெவ்வேறு திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வுகள் உள்ளன. இதன் விலைகள் முறையே ரூ.71,500 மற்றும் ரூ.74,000 ஆகும்.
லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வில் (Lithium-ion Battery) 60V 30AH மற்றும் 74V 32AH என்கிற இரண்டு மாறுபட்ட திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வுகள் உள்ளன. இதன் விலைகள் முறையே ரூ.87,500 மற்றும் ரூ.91,500 ஆகும்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு என எதுவும் தேவைப்படாது. இது ஒரு மென்மையான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் பயணிக்க முடியும். இதில், 60/72V BLDC எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 180 கிலோ வரையில் எடைத் தாங்கும் திறன் கொண்டதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |