2035-க்குள் 7.6 பில்லியன் டொலரை எட்டும் மின்காந்த ஆயுத சந்தை
2035-க்குள் மின்காந்த ஆயுத சந்தையின் மதிப்பு 7.6 பில்லியன் டொலரை எட்டும் என கணிக்கப்படுகிறது.
மின்காந்த ஆயுதங்கள் தொடர்பான உலக சந்தை, 2025-ல் 1.1 பில்லியன் டொலராக இருந்து, 2035-ல் 7.6 பில்லியன் டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆண்டுக்கு 21.6 சதவீத வளர்ச்சி விகிதத்தை (CAGR) காட்டும் முக்கிய முன்னேற்றமாகும்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் உயர் சக்தி மின்னணு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் இந்த வளர்ச்சி ஏற்படுகிறது.
2020-2024 காலப்பகுதியில், இந்த ஆயுதங்கள் சோதனை கட்டத்தில் இருந்தன. 2025-ல் சந்தை பரவலாக ஏற்கத்தக்க நிலையில் மாறியுள்ளது.
2025-2030 காலத்தில், நிலையான வளர்ச்சி ஏற்பட்டு, 20235-க்குள் சந்தை முழுமையாக ஒருங்கிணைந்த கட்டத்தை அடையும்.
வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள்
- தேசிய பாதுகாப்பு பட்ஜெட்கள் மாற்றம் நவீனமயமாக்கல் திட்டங்கள்
- உயிர் சக்தி திசை மாற்றும் ஆயுதங்கள்
- ரேடார், தொடர்பு மற்றும் வான்வழி அமைப்புகள்
- தானியங்கி கட்டுப்பாடு மற்றும் உணரிகள் ஒருங்கிணைப்பு
தொழில்நுட்ப ரீதியில், Particle Beam Weapons (PBW) 49.3 வருமானத்தை உருவாக்கும் முக்கிய பிரிவாகும். இராணுவ பயன்பாடுகள் 61.2 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
Crowd control மற்றும் electronic disruption ஆகியவற்றுக்கான non-lethal ஆயுதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிராந்திய ரீதியில், சீனா (29.2% CAGR), இந்தியா (27%) மற்றும் ஜேர்மனி (24.8%) ஆகியவை வேகமாக வளர்ந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் முன்னணி நிறுவங்களால் வழிநடத்தப்படுகின்றன.
Lockheed Martin, BAE Systems, Boeing போன்ற நிறுவனங்கள் இந்த சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |