யானைகளுக்கு இடையேயான மோதலில் சுற்றுலாப்பயணி உயிரிழந்த விவகாரம்: சமீபத்திய தகவல்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில், யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்த விடயம் நினைவிருக்கலாம்.
யானைகளுக்கு இடையேயான மோதலில்...
கர்நாடகா மாநிலத்திலுள்ள கொடகு மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றிருந்தது சென்னையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று.
திங்கட்கிழமையன்று, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் யானைகள் குளிப்பாட்டப்படுவதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் துளசி (33) என்னும் அந்தப் பெண்.

திடீரென் அந்த யானைகளில் ஒன்றான காஞ்சன் என்னும் யானை மற்றொரு யானையான மார்த்தாண்டா என்னும் யானையைத் தாக்கியுள்ளது.
காஞ்சன் தாக்கியதில் மார்த்தாண்டா தடுமாறி கீழே விழ, அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த துளசி யானைக்கடியில் சிக்கி உடனடியாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாயன்று, மார்த்தாண்டா யானையும் உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
காஞ்சன் தாக்கியதில் மார்த்தாண்டாவுக்கு வயிற்றிலும் கால்களிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், காயங்கள் காரணமாக அந்த யானை உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |