தினமும் யோகா செய்யும் யானைகள்: ஹூஸ்டன் உயிரியல் பூங்காவின் சிறப்பு முன்னெடுப்பு
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் உள்ள யானைகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக தினமும் யோகா பயிற்சி செய்து வருகின்றன.
தினமும் யோகா பயிற்சி
அமெரிக்காவின் ஹூஸ்டன் உயிரியல் பூங்காவில்(Houston Zoo) உள்ள யானைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் யோகா பயிற்சி செய்து வருகின்றன.
உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து யானைகளும் தங்களது தினசரி யோகா பயிற்சி அமர்வின் போது உடல் பரிசோதனைக்காக பல்வேறு பயிற்சிகளை செய்கின்றன.
இந்த பயிற்சிகள் தொடர்பாக ஹூஸ்டன் உயிரியல் பூங்காவின் மேலாளர் கிறிஸ்டன் விண்டில் பேசிய போது, யானைகளின் தினசரி அமர்வின் போது தான், அவைகளின் ஒட்டுமொத்த உடலையும், பாதங்களையும், அவற்றின் வாய் பகுதியை நன்றாக பரிசோதிக்க முடியும்.
houston zoo
மேலும் அவைகளின் உடல் அசைவு மற்றும் எவ்வாறு நகர்கின்றன என்பதை கொண்டு யோகா பயிற்சியை அவர்கள் எவ்வாறு உணர்கின்றன என்பதை அறிந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
30 வினாடி முதல் 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் ஒவ்வொரு அமர்வின் இறுதியிலும், பங்கேற்பாளர்களுக்கு வாழைப்பழம், ரொட்டி துண்டுகள் சிறப்பு வெகுமதியாக வழங்கப்படும்.
இந்த அமர்வில் கலந்து கொள்ள விரும்பாத யானைகள் நிச்சயமாக பயிற்சியின் போது வெளியேறலாம், அவர்களை யாரும் தடுப்பது இல்லை, ஆனால் என்ன அவர்களுக்கான சிறப்பு வெகுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
Getty
இந்த யோகா பயிற்சியின் போது யானைகள் தங்களது முன் மற்றும் பின் கால்களை தூக்கி உடலை சமநிலைப்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது. பெரும்பாலான பயிற்சிகள் யானைகள் காட்டில் செய்யும் இயக்கங்களை ஒத்து இருக்கின்றன என கிறிஸ்டன் விண்டில் தெரிவித்துள்ளார்.
யோகாவில் கலக்கும் டெஸ் யானை
உயிரியல் பூங்காவில் உள்ள 40 வயதுடைய டெஸ் என்ற யானை தன்னுடைய முன் கைகளால் 6,500 பவுண்ட் எடையுள்ள எடையை தூக்கி நிற்க முடியும் என்றும், டெஸ் தான் பூங்காவில் உள்ள மிகவும் நெகிழ்வான(most flexible) யானை என்று கிறிஸ்டன் விண்டில் தெரிவித்துள்ளார்.
2 வயதான டெடி என்ற யானை தற்போது தன்னுடைய உடல் பாகங்களை அறிந்து கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உயிரியல் பூங்காவில் உள்ள மிகவும் வயதான யானையான 54 வயது மெத்தை(Methai) கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மிகவும் மெதுவாக அதனால் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.