பிறந்தநாள் கொண்டாடிய 3 வயது கறுப்பின சிறுவன் கொடூரமாக சுட்டுக் கொலை! பொதுமக்களிடம் உதவி கோரும் உறவினர்
அமெரிக்காவில் 3 வயது கறுப்பின சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட வழக்கில் உறவினர் மற்றும் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், மியாமி அவெனியூவில் உள்ள பகுதியில், கடந்த 24-ஆம் திகதி மாலை எலிஜா லாபிரான்ஸ் (Elijah LaFrance) எனும் கறுப்பின குழந்தை தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
கேக் வெட்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகு 8 மணியளவில், திடிரென பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் பிறந்தநாள் கொண்டாடிய வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். சுமார் 60 குண்டுகள் சுடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குழந்தை எலிஜா லாபிரான்ஸ் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 21 வயதான பெண் ஒருவருக்கும் குண்டடிபட்டது. ஆனால் அவர் உயிர் பிழைத்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து Miami-Dade பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்கள் யார் என்பது குறித்த தகவல் கிடைக்காத நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொலையாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 15,000 டொலர் சன்மானம் அளிப்பதாக மியாமி-டேட் பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக குடும்பத்தினர் சார்பாக 10,000 டொலர் வெகுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
HELP US CATCH A MURDERER! Segment - 10? Our Homicide Bureau detectives need your help to solve the murder of 3-year-old Elijah LaFrance that occurred on 4/24/21 in the area of N. Miami Avenue & NE 158 Street. #TogetherWeCan
— Miami-Dade Police (@MiamiDadePD) April 26, 2021
?: https://t.co/BUK1UK4ZD2 pic.twitter.com/yvfhne9OHW
3 வயது குழந்தையின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை, குறிப்பாக அவரது தாய் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் குழந்தையை கொன்ற பாவிகளை பிடிக்க உதவுங்கள் என மன்றாடி கேட்டுக்கொள்வதாக கூறினார்.