கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க்! எழுந்தது சர்ச்சை
கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி சாரதிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டதுடன், போலிசாருக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவை, ஹிட்லருடன் ஒப்பிட்டு எலன் மஸ்க் கருத்து தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.
அதாவது, அவரது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் படத்தை வெளியிட்டு அதில், ஹிட்லர் கூறுவது போல் என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் டுவிட் பதிவை நீக்கினார்.
ஏற்கனவே கனடாவில் நடக்கும் லாரி டிரைவர்கள் போராட்டத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.