BBLயில் அதிவேக அரைசதம்! 38 பந்துகளில் 81 ரன் விளாசல் (வீடியோ)
மகளிர் BBL டி20 போட்டியில் எல்லிஸ் பெர்ரி 23 பந்துகளில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
ஜியார்ஜியா வாரெஹம் 61
சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டில் நடந்தது.
முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 8 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய ஜியார்ஜியா வாரெஹம் 31 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் குவித்தார்.
சோபி எக்லெஸ்டோன், எல்லிஸ் பெர்ரி மற்றும் சிப்பெல் தலா 2 விக்கெட்டுகளும், பிரே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Ellyse Perry hitting sixes for fun ? #CricketTwitter #WBBL10 pic.twitter.com/DTRzLnDCoH
— Female Cricket (@imfemalecricket) October 27, 2024
அடுத்து களமிறங்கிய சிட்னி அணியில் ஹொல்லி ஆர்மிடேஜ் 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
எல்லிஸ் பெர்ரி அரைசதம்
பின்னர் வந்த கார்ட்னர் 2 ஓட்டங்களில் அவுட் ஆக, மறுமுனையில் எல்லிஸ் பெர்ரி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது BBLயில் அவர் அடித்த அதிவேக அரைசதம் ஆகும்.
Ellyse Perry smashes fifty in just 23 balls ?
— Female Cricket (@imfemalecricket) October 27, 2024
G.O.A.T for a reason ? #CricketTwitter #WBBL10 pic.twitter.com/qnBpveATVd
பின்னரும் சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய பெர்ரி 38 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களத்திற்கு வந்த வீராங்கனை சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாரா பிரிஸ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் சிட்னி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாரெஹம் 3 விக்கெட்டுகளும், அலிஸ் கேப்சி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரண்டு விக்கெட்டுகளுடன் 81 ஓட்டங்கள் விளாசிய எல்லிஸ் பெர்ரி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றார்.
4 needed in 7 balls and 15-year-old Caoimhe Bray hits the winning boundary ?
— Female Cricket (@imfemalecricket) October 27, 2024
A star is born ? #CricketTwitter #WBBL10 pic.twitter.com/oMs9uqHwbM
81 off just 38 balls for Ellyse Perry ?
— Female Cricket (@imfemalecricket) October 27, 2024
11 x 4s | 3 x 6s | 213.15#CricketTwitter #WBBL10 pic.twitter.com/Msu3P8evav
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |