134 பில்லியன் டொலர் வேண்டும் - Open AI, மைக்ரோசாப்ட் மீது எலான் மஸ்க் வழக்கு
ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 134 பில்லியன் டொலர் கேட்டு எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Open AI
2015 ஆம் ஆண்டில் லாப நோக்கமற்ற அமைப்பாக தொடங்கப்பட்ட Open AI-யின் நிறுவனர்களில் எலான் மஸ்கும் ஒருவர் ஆவார்.

எலான் மஸ்க் இதன் ஆரம்பகட்டத்தில், சுமார் 38 மில்லியன் டொலர் முதலீடு செய்ததாகவும், அதன் ஆரம்பகால விதை நிதியில் சுமார் 60% பங்கு வகித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திறமையாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய உதவுவதன் மூலமும், நிறுவனர்களுக்கு செல்வாக்கு மிக்க தொடர்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது தனது பெயரையும் நம்பகத்தன்மையையும் வழங்குவதன் மூலம் ஆரம்ப நாட்களில் நேரடிப் பங்காற்றியதாக கூறியுள்ளார்.
AI சேட்பாட் துறையில் முன்னணியில் உள்ள ChatGPT செயலியின் தாய் நிறுவனம் Open AI ஆகும். இதன் மூலம் Open AI நிறுவனம் பெரிய அளவில் வருமானம் ஈட்டி வருகிறது.

2018 ஆம் ஆண்டில் Open AI யில் இருந்து விலகிய எலான் மஸ்க், அதற்கு போட்டியாக XAI தொடங்கி அதன் மூலம் GROK சேட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
134 பில்லியன் டொலர்
லாப நோக்கமற்ற என்ற அடிப்படையில் இருந்து விலகியதன் மூலம் தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ள எலான் மஸ்க், தனது ஆரம்பகால ஆதரவின் மூலம் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியதாக கூறி, 134 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.21 லட்சம் கோடி) கேட்டு Open AI மற்றும் அதன் அதன் முக்கிய கூட்டாளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டை, ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் மறுத்துள்ளது.
அதேவேளையில், இந்த வழக்கு வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், "எலோன் மஸ்க் வேண்டுமென்றே விசித்திரமான, கவனத்தை ஈர்க்கும் கூற்றுக்களை வெளியிடுவார்.
எங்களுக்கு வலுவான பாதுகாப்புகள் உள்ளன, மேலும் இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என ஓபன் ஏஐ அதன் முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |