டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு: சீனாவில் வைரலான எலான் மஸ்க்கின் 360 டிகிரி வீடியோ
பெய்ஜிங் நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எலான் மஸ்க் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இருவரும் இடையிலான சந்திப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
ELON MUSK SPINNING AROUND GETTING THE MOMENT IN CHINA pic.twitter.com/BCA1jwV0xM
— RT (@RT_com) May 14, 2026
அப்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறையில் ஆதிக்கம், வல்லரசு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால பொருளாதார மோதல்கள், தைவான் விவகாரம், ஈரான் தொடர்பான பதற்றங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் வைரல் தருணம்
இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பின் போது, அமெரிக்க உயர்மட்ட வர்த்தக குழுவின் சார்பாக பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

அப்போது நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எலான் மஸ்க், யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய மொபைல் போனில் 360 டிகிரி வீடியோ ஒன்றை எடுத்தார்.
கடுமையான நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் இத்தகைய உயர் ராஜதந்திர நிகழ்வுகளில் எலான் மஸ்க் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வீடியோ எடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |