எலான் மஸ்க்கை மிரட்டிய கல்லூரி மாணவன்! 50,000 டொலர் டீல் பேசிய சுவாரசிய சம்பவம்..
அமெரிக்காவைச் சேர்த்த 19 வயது கல்லூரி மாணவன் டெஸ்லா நிறுவனர் Elon Musk-யிடமே 50,000 டொலர் கேட்டு டீல் பேசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Jack Sweeney என்ற 19 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் Elon Musk's Jet என்ற பெயரில் டிவிட்டர் ஐடி ஒன்றை நடத்தி வருகிறார். இதில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
இந்த ஒரு டிவிட்டர் கணக்கை வைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் அறியப்பட்ட நபராக உள்ள Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கிடம் 50,000 டொலர் பணம் கேட்டு டீல் பேசியுள்ளார் என்பது தான் ஆச்சரியமான செய்தி.
Jack Sweeney எப்படி உலகின் நம்பர் ஒன் பணக்காரரை மிரட்டி டீல் பேச முடியும்? அந்த இளைஞனுக்கும் எலான் மஸ்கிற்கும் என்ன தொடர்பு? என பல கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்கும்.
Photoillustration: Brendan Smialowski/AFP and Getty Images Plus; Protocol
ஒரு டிவிட்டர் கணக்கை வைத்துக் கொண்டு எப்படி எலான் மஸ்கை இந்த இளைஞர் மிரட்டுகிறார்? அதற்கு எலான் ஏன் இளைஞரின் கணக்கை பிளாக் செய்ய வேண்டும் என அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த செய்தியில் பதில் இருக்கிறது.
எலான் மஸ்க்கின் விமானம் எப்போது எங்கே இருந்து புறப்படுகிறது?, எங்கே சென்றடைகிறது? அவர் எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் பயணம் செய்தார் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அக்கு வேரு, ஆணி வேராக பிரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போடுகிறார் ஜேக் ஸ்வீனி.
Bot எனப்படும் தானியங்கி சாப்ட்வேர் மூலமாக இவை எல்லாவற்றையும் பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார் அந்த இளைஞர்.
Photo Courtesy: Jack Sweeney
சாதாரண நபராக இருக்கக் கூடிய நம்முடைய பயண விவரங்களை யாரேனும் நேரில் பார்த்தார் போல சொன்னாலே நமக்கு தூக்கிவாரிப் போட்டுவிடும்.
பல கோடி சொத்து, தொழில், புகழ் உள்ளிட்ட பலவற்றுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்கிற்கு அந்த பயம் இல்லாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக உண்டு. குறிப்பிட்ட ட்விட்டர் ஐடியில் பகிரப்படும் தகவல்களால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதினார் அவர்.
இதையடுத்து, ஜேக் ஸ்வீனிக்கு ட்விட்டரில் பெர்சனல் மெசேஜ் அனுப்பி, இதுபோன்ற தகவல்களை அழிக்க வேண்டும் என்றார் எலான் மஸ்க். குறிப்பிட்ட ஐடியை டெலீட் செய்ய 5,000 டொலர் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீட்டுள்ளார் எலான் மஸ்க்.
This is the second flight like this now, looks like they're working on something or trying to mess with us. pic.twitter.com/KOVotTbDUN
— Elon Musk's Jet (@ElonJet) February 1, 2022
ஆனால், இந்த பேரம், 19 வயதான கல்லூரி மாணவரான ஜேக் ஸ்வீனிக்கு போதுமானதாக இல்லை. 50,000 டொலர்கள் வேண்டும் என்று டீல் பேசியுள்ளார் ஸ்வீனி.
இந்தத் தொகை கிடைத்தால் தனக்கு கல்லூரி கல்வி கட்டணம் செலுத்தவும், ஒரு டெஸ்லா கார் வாங்கவும் உதவிகரமாக இருக்கும் என்று ஒரே போடாக போட்டார்.
ஆனால், இந்த மிரட்டலுக்கு மசியாத எலான் மஸ்க், ஸ்வீனியை டிவிட்டர் உள்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் பிளாக் செய்துவிட்டார்.
ஆனால், ஜேக் ஸ்வீனியின் கனவு இத்தோடு நிற்கவில்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் Bill Gates, அமேசான் நிறுவனர் Jeff Bezos உள்ளிட்ட பல பிரபலங்களின் விமான பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து, அவர்களிடம் பேரம் பேசி பணம் சம்பாதிக்க உள்ளதாக பீதியை கிளப்பியுள்ளார்.