நண்பனின் முன்னாள் மனைவியுடன் தொடர்பு., எலோன் மஸ்க் குறித்து வெளியான சர்ச்சை தகவல்
Google இணை நிறுவனர் செர்ஜியின் மனைவியுடன் எலோன் மஸ்க் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க் டைம்ஸ் அறிக்கையின்படி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி Elon Musk கெட்டமைனைப் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞரும் Google இணை நிறுவனர் செர்ஜி பிரின் (Sergey Brin) முன்னாள் மனைவியுமான நிக்கோல் ஷனாஹனுடன் (Nicole Shanahan) உறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
2021-இல், ஷனஹான் நியூயார்க்கில் உள்ள ஒரு கிளப்பில் பிறந்தநாள் விழாவை நடத்தினார், இதில் பிரின் நீண்டகால நண்பரான மஸ்க் கலந்து கொண்டார்.
அதே ஆண்டு, அவர்கள் இருவரும் மியாமியில் Art Basel திருவிழா தொடர்பாக மஸ்க்கின் சகோதரர் Kimbal Musk நடத்திய ஒரு தனியார் விருந்தில் மீண்டும் மீண்டும் சந்தித்தனர்.
விருந்தில், எலோன் மஸ்க் மற்றும் நிக்கோல் இருவரும் சேர்ந்து ketamine மருந்தை எடுத்துக் கொண்டு சில மணி நேரங்கள் காணாமல் போனதாக, நிகழ்வில் கலந்து கொண்ட பலர் நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளனர்.
நிக்கோல் தனது கணவரான செர்ஜியிடம், தான் எலோன் மஸ்க்குடன் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டதாக மூன்று பேர் கூறியுள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்ட NYT, விருந்து முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரின் மற்றும் நிக்கோல் இருவரும் பிரிந்ததாகவும், அதையடுத்து 2022-ல் "சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகளை" முன்வைத்து செர்ஜி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாகவும் கூறியுள்ளது.
மஸ்க் மற்றும் நிக்கோல் இருவரும் இந்த விவகாரத்தை மறுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பீப்பிள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நிக்கோல், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
நிக்கோல் ஷனஹான் யார்?
கலிபோர்னியாவில் வசிக்கும் 38 வயதான ஷனஹான், முன்பு Silicon Valley-ல் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் துணை வேட்பாளராக அவர் உள்ளார்.
நிக்கோல் தனது பிரச்சாரத்திற்கு ஆதரவாக கணிசமான நிதி இருப்பு வைத்திருந்தார். செர்ஜி பிரின் விவாகரத்து செய்ததற்கான ஜீவனாம்சமாக அவர் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பெற்றதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Elon Musk Nicole Shanahan Affair, Sergey Brin Nicole Shanahan divorce, Nicole Shanahan Elon Musk news, google co-founder Sergey Brin