இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளரை வெளிப்படையாக ஆதரித்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் மெல்ல சூடு பிடித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வந்தாலும், தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
He states his beliefs clearly. https://t.co/SjpuXLCFpo
— Elon Musk (@elonmusk) August 18, 2023
இந்த நிலையில். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்டுள்ள இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி என்பவரை தற்போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து, இரண்டாவது நாளாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
விவேக் ராமசாமி பேசுவதில் ஆழமான கருத்திருப்பதாக குறிப்பிட்டிருந்த எலான் மஸ்க், தற்போது தனது நம்பிக்கையை அல்லது கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என எலான் மஸ்க் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பிற்கு சவாலளிப்பவராக
ஹார்வர்ட் மற்றும் யேலில் பட்டம் பெற்ற தொழில்நுட்ப-தொழில்முனைவோரான விவேக் ராமசாமி, இந்திய மாநிலம் கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு சவாலளிப்பவராக பார்க்கப்படும் Ron DeSantis என்பவரையும் எலான் மஸ்க் ஆதரித்திருந்தார். விவேக் ராமசாமியுடன், நிக்கி ஹேலி மற்றும் ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகிய இரு இந்திய வம்சாவளியினரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
38 வயதான விவேக் ராமசாமி சமீபத்தில் தெரிவிக்கையில், அமெரிக்காவை முன்னேற்றுவது மட்டுமல்ல, நாட்டை ஒருங்கிணைப்பதும் தற்போதைய தேவையாக உள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |