2026 இடைத்தேர்தலில் மிகப்பெரிய அரசியல் நன்கொடையாளரான எலான் மஸ்க்
Elon Musk Biggest Donor in 2026 Midterms: அமெரிக்காவில் 2026 இடைத்தேர்தலில் மிகப்பெரிய அரசியல் நன்கொடையாளரான எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
எலான் மஸ்க் மிகப்பெரிய நிதி உதவி
அமெரிக்காவின் 2026 இடைத்தேர்தலை முன்னிட்டு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் மிகப்பெரிய அளவில் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அவர் ஜூலை மாதத்திலிருந்து 276 மில்லியன் டொலர் (சுமார் ரூ.2,300 கோடி) அளவிற்கு குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் குழுக்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
இதன் மூலம், மஸ்க் 2026 இடைத்தேர்தலின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற நிலையை பெற்றுள்ளார்.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்
இதில், 158 மில்லியன் டொலர் Senate Leadership Fund-க்கு, மேலும் 76 மில்லியன் டொலர் America PAC-க்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 2025-26 தேர்தல் சுழற்சியில் மஸ்க் வழங்கிய நிதி 366 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது, 2024 தேர்தலில் அவர் வழங்கிய 290 மில்லியன் டொலரை விட அதிகம்.
மஸ்க், கடந்த ஆண்டு “அரசியலில் குறைவாக செலவிடுவேன்” என்று கூறியிருந்தாலும், இப்போது அவரது நிதி உதவி வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் அரசியல் நன்கொடைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
மேலும், அவர் Texas மாநிலத்தில் குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் Lone Star Liberty PAC-க்கு 10 மில்லியன் டொலர், House Republicans-ஐ ஆதரிக்கும் Congressional Leadership Fund-க்கு 20 மில்லியன் டொலர், Republican Governors Association-க்கு 10 மில்லியன் டொலர் மற்றும் Republican Attorneys General Association-க்கு 2 மில்லியன் டொலர் வழங்கியுள்ளார்.
டெக்சாஸில் மஸ்க் தனது வணிகங்களை விரிவுபடுத்தி வருவதால், அங்கு அவரது அரசியல் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
எலான் மஸ்க் வழங்கிய இந்த நிதி உதவி, 2026 இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |