காதல் குறித்த வதந்திகளுக்குப் பின் மீண்டும் மெலோனியை சந்தித்த எலான் மஸ்க்: கலாய்க்கும் இணையம்
உலக தலைவர்களில் அனைவருடன் இனிமையாக பழகுவதாலேயே அடிக்கடி வதந்திகளுக்கு ஆளாகும் பெண் தலைவர்களில் ஒருவர் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி.
காதல் குறித்த வதந்திகள்
சுமார் ஓராண்டுக்கு முன்பு மெலோனியும் அமெரிக்கக் கோடீஸ்வரரான எலான் மஸ்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாக, இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவத் துவங்கின.
We are not dating
— Elon Musk (@elonmusk) September 24, 2024
அதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான எக்ஸில் அதே படத்தைப் போட்டு, அதன் கீழ், நாங்கள் காதலிக்கவில்லை, என ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் மஸ்க்.
கலாய்க்கும் இணையம்
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மெலோனி, வியாழக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கும்போது, மீண்டும் எலான் மஸ்கை சந்தித்தார்.
Contenta di rivedere a Washington il mio amico @elonmusk pic.twitter.com/phKTwTcXyz
— Giorgia Meloni (@GiorgiaMeloni) April 18, 2025
இருவரும் மரியாதை நிமித்தம் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ள, எலான் மஸ்க் வெட்கப்படுவது, வெளியாகியுள்ள வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து மீண்டும் இருவரையும் சமூக ஊடகங்களில் கலாய்த்துத் தள்ளுகிறார்கள் மக்கள்.
மஸ்க் வெட்கப்படுவதுபோல தெரிகிறதே, உண்மையா என ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவர், உண்மையாகவே மஸ்குக்கு மெலோனி மீது ஒரு கண் என கேலி செய்ய, ம்ம்ம், இருவருக்கும் இடையில் காதல் தெரிகிறது என்கிறார் மற்றொருவர்.
ஆக, மீண்டும் இணையத்தில் ஒரு காதல் கதை குறித்த வதந்திகள் உலாவத் துவங்கியுள்ளன!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |