ட்விட்டரை நேர்மையான சமூக ஊடகமாக மாற்றியுள்ளோம்: எலான் மஸ்க் பெருமிதம்
ட்விட்டரை நேர்மை வாய்ந்த சமூக ஊடகமாக மாற்றி இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரை நேர்மையான தளமாக மாற்றியுள்ளோம்
உலகின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கிட்டத்தட்ட 4000 பேர் வரை கூடியிருந்த விவா-டெக் கருத்தரங்கில் பேசிய எலான் மஸ்க், முன்பு ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான சமூகத்திற்கு எதிராக தீங்கிழைக்கும் பண்புகள் இருந்தது. ஆனால் அவற்றை சமூகத்தில் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக தளமாக என்னால் மாற்ற முடியும் என நம்பியதாக தெரிவித்துள்ளார்.
Let’s work together ! #ChooseFrance ?? pic.twitter.com/6R01XT44rw
— Emmanuel Macron (@EmmanuelMacron) June 16, 2023
தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை தொடர்ந்து உபயோகிக்கும் பயனர்களுக்கு அதில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை உணர முடியும், அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு ட்விட்டர் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"We should be able to express things, otherwise it is censorship and at some point, censorship goes against you."
— Viva Technology (@VivaTech) June 16, 2023
- @ElonMusk discusses with @Cheydema, CEO @Orange at #VivaTech pic.twitter.com/E95fKGPbKY
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தாக மாறலாம்
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பேசிய எலான் மஸ்க், AI தொழில்நுட்பத்தை பொறுத்தவரை அவை முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், இல்லையேல் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய நியூரோலிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நியூரோலிங் சிப்கள் செயல்முறை இந்த ஆண்டு மனித மூளைக்குள் உள்வைக்கும் செயல்முறையை பரிசோதிக்கும்.
இந்த செயல்முறையின் முன்னேற்றங்கள் தாமதமாக இருந்தாலும், இதன் வெற்றி இழந்த மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை முழுமையாக மீட்க உதவும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |