எலான் மஸ்க்-கை ஆச்சரியப்படுத்திய 14 வயது சிறுவன்: இளம் வயதில் ஸ்பேஸ் எக்ஸில் பணியாற்ற வாய்ப்பு
எலான் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு 14 வயதுடைய கைரான் குவாசி என்ற சிறுவனை பணியமர்த்தி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
14 வயதில் கிடைத்துள்ள வாய்ப்பு
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் கைரான் குவாசி(Kairan Quazi), உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
கைரான் குவாசி தன்னுடைய 11 வயதில் கணினி மற்றும் பொறியியல் படிப்பை படிக்க தொடங்கிய நிலையில், தற்போது சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
Kairan Quazi
இதையடுத்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட குவாசி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கடுமையான நேர்காணல் சுற்றுகளை வெற்றிகரமாக எதிர் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேசமயம் கைரான் குவாசியின் திறமையை கண்டு எலான் மஸ்க் வியப்படைந்துடன், அவருடைய இளம் வயதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பிரிவில் பணி புரியவும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
கைரான் குவாசி அவரது 10 வயதிலேயே Intel Labs நிறுவனத்தில் AI குறித்து ஆராய்ச்சி செய்யும் பயிற்சி ஊழியராக இருந்துள்ளார் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
14 year old Kairan Quazi graduates from @SantaClaraUniv on 6/17. He will be the youngest to ever graduate from SCU and he’ll start at @SpaceX as a Software engineer. Local legend. pic.twitter.com/JLe8Vc9toA
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) June 11, 2023
கைரான் குவாசி நெகிழ்ச்சி
இந்நிலையில் கைரான் குவாசி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் ஸ்டார்லிங்க் குழுவில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வயதை பொருட்படுத்தாமல் என்னுடைய திறமை கொண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பது எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து வரவேற்று இருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் தன்னுடைய தாயுடன் வாஷிங்டனுக்கு சென்று பணியாற்ற இருப்பதாகவும் கைரான் குவாசி தெரிவித்துள்ளார்.