உக்ரைனுக்கு வெற்றி சாத்தியமில்லை.. மக்கள் மீது அக்கறை இருந்தால் அமைதியை தேடுங்கள்: உலக கோடீஸ்வரரின் சர்ச்சை பதிவு
உக்ரைன் அல்லது ரஷ்யா எந்த நாட்டிற்கு ஆதரவு தரும் எலான் மஸ்க்கை விரும்புவீர்கள் என கேட்ட உக்ரேனிய ஜனாதிபதி
உங்களுக்கு அக்கறை இருந்தால், அமைதியைத் தேடுங்கள் என எலான் மஸ்க் சர்ச்சை கருத்து
ரஷ்யாவுடன் பெரிய அளவில் போர் ஏற்பட்டால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு என எலான் மஸ்க் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.
அதில் ரஷ்யா -உக்ரைன் போரில் அமைதியை ஏற்படுத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ.நா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும்.
KEVORK DJANSEZIAN/GETTY IMAGES
மேலும் கிரிமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் தாங்கள் ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கிரிமியா முறையாக ரஷ்யாவின் ஒரு பகுதியாகும், அது 1783 முதல் (Khrushchev-வின் தவறு வரை). கிரிமியாவிற்கு நீர் வழங்கல் உறுதி மற்றும் உக்ரைன் நடுநிலை வகிக்கிறது என குறிப்பிட்டு ஆம், இல்லை என வாக்களியுங்கள் என கேட்டிருந்தார்.
அவரது இந்த ட்வீட்டை குறிப்பிட்டு உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதிவு ஒரு வாக்கெடுப்பை நடத்தினார். அதில் எந்த எலான் மஸ்க்கை நீங்கள் விரும்புகிறீர்கள்? உக்ரைனை ஆதரிக்கும் மஸ்க்கா அல்லது ரஷ்யாவை ஆதரிக்கும் மஸ்க்கா என அவர் கேட்டிருந்தார்.
(President's Office)
தற்போது எலான் மஸ்க் மீண்டும் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மஸ்க் தனது ட்வீட்டில், 'ரஷ்யா பகுதி அணிதிரட்டலைச் செய்கிறது. கிரிமியா ஆபத்தில் இருந்தால் அவர்கள் முழு போர் அணிதிரட்டலுக்கு செல்வார்கள்.
இரு தரப்பிலும் மரணம் பேரழிவை ஏற்படுத்தும்.
ரஷ்ய நாடானது உக்ரைனின் மக்கள்தொகையில் 3 மடங்கு பெரியதாக உள்ளது, எனவே உக்ரைனின் வெற்றி மொத்தப் போரில் சாத்தியமில்லை. உக்ரைன் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அமைதியைத் தேடுங்கள்' என தெரிவித்துள்ளார்.