அமெரிக்காவின் USAID ஒரு பணமோசடி அமைப்பு: எலான் மஸ்க் கடும் விமர்சனம்
Elon musk criticize USAID as a Money-Laundering Scam: சட்டவிரோதமாக பண மோசடி அமைப்பாக அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமையை எலான் மஸ்க் தனது X தளத்தில் விமர்சித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய பணக்காரரான SpaceX-ன் CEO எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமைக்கு (USAID) எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை. USAID-ல் இருந்த பயனுள்ள திட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் கீழ் ஏற்கனவே வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், USAID-ன் நிதி நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கி பிற பயனர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை எலான் மஸ்க் பகிர்ந்தும், விருப்பம் தெரிவித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு USAID-ல் நடைபெற்ற அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மஸ்க்கின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. அந்த நேரத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த அமைப்பில் சுமார் 83 சதவீத திட்டங்களை அதிரடியாக ரத்து செய்தார்.
அப்போது எலான் மஸ்க் தலைமையில் செயல்பட்டு, தற்போது கலைக்கப்பட்டுள்ள 'அரசுத் திறன் மேம்பாட்டுத் துறையின்' (DOGE) பரிந்துரையின் பேரிலேயே இந்தப் பாரிய நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.