பல திருமணங்கள், காதல்கள் என நீளும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் வாழ்க்கை! கல்லூரி காதலி செய்த சுவாரசிய செயல்
எலான் மஸ்கின் முன்னாள் காதலி எலான் உடனான தனது சுவாரசியமான புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தான் தற்போது உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆவார்.
எலான் மஸ்க் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து கொண்டால் பல திருமணங்கள், பல காதலிகள், லிவ் டுகெதர் என பட்டியல் நீளும். அந்த வகையில் எலான் மஸ்க்-ன் கல்லூரி காதலியாக ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) என்பவர் இருந்தார்.
RR Auction
அவர் எலான் மஸ்க் உடனான தனது புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார். இவை எலான் மஸ்க் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அரிய புகைப்படங்கள் ஆகும். அப்போது அவருக்கு வயது 20 ஆகும்.
தற்போது ஜெனிபர் தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வருகிறார், இருவரும் காதலித்த வேளையில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை RR ஆக்க்ஷன் மூலம் தனது வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்குப் பணம் திரட்டுவதற்காக விற்பனை செய்கிறார்.
RR Auction
அந்த பதிவில் எலான் யாரிடமும் பேசாமல் மிகவும் ரிசர்வாக இருப்பார், ஆனால் எப்போதாவது அவர் மிகவும் சில்லியாக நடந்து கொண்டு என்னை சிரிப்பு மூட்டுவார்.
எங்களின் ஒரு வருட காதல் இனிமையாக இருந்தது, ஆனால் எலான் மஸ்க் அந்தளவுக்கு தன்னிடம் பாசமாக இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். 45 வயதான ஜெனிபர் தற்போது தெற்கு கரோலினாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
RR Auction