வளர்ப்பு நாயை ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்த எலான் மஸ்க்!
எலான் மஸ்க் தனது வளர்ப்பு நாயை ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளதாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக தனக்கு பதிலாக தனது வளர்ப்பு நாயை நியமித்துள்ளதாக எலோன் மஸ்க் புதன்கிழமை தெரிவித்தார்.
மஸ்க் தனது செல்ல நாயான “Floki” நிறுவனத்தின் CEO நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார், அதில் “Twitter-ன் புதிய CEO அற்புதமானவர்.” என்று எழுதியுள்ளார்.
Elon Musk Twitter
மேலும், இதற்கு முன் இந்த பொறுப்பில் இருந்தவரை விட, இந்த நாய் மிகவும் சிறந்தது! என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது நாய் கணக்கில் சிறந்தது என்றும் அதற்கு தனி ஸ்டைல் இருப்பதாகவும் மஸ்க் கூறினார்.
இதையடுத்து, பல பயனர்கள் மஸ்க்கின் பதிவிற்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.
இந்த பொறுப்பிற்கு இதைவிட கிறுக்குத்தனமான நபர் கிடைக்கமாட்டார் என நினைப்பதாக, பயனர் ஒருவர் கமெண்ட் செய்தார். அதற்கு "அவன் இந்த வேலைக்கு சரியானவன்." என்று மஸ்க் பதிலளித்தார்.
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023
கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் நடத்திய கருத்துக்கணிப்பில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பதிலளித்தவர்களில் 57.5 சதவீதம் பேர் ஆம் என்று கூறினர்.
இதற்கு பதிலளித்த மஸ்க் தனது இடத்தைப் பிடிக்க "யாராவது போதுமான முட்டாள்" என்பதைக் கண்டறிந்த பிறகு மட்டுமே மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை இயக்குவேன் என்று கூறியிருந்தார்.
இப்போது, தனது செல்லப்பிராணியான நாயை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதாக அவர் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.