ட்விட்டரில் பயனாளர்கள் பணம் சம்பாதிக்க புதிய திட்டம்! எலான் மாஸ்க் அதிரடி
சமூக வலைத்தளமான ட்விட்டர் விரைவில் Creatorகளுக்கு பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தினை அமுலுக்கு கொண்டுவர உள்ளது.
மஸ்க்கின் புதிய திட்டம்
எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கைப்பற்றிய பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவற்றில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தனது முடிவில் தீர்க்கமாக உள்ளார்.
அந்த வகையில் தான் ட்விட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியை அவர் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் எலான் மஸ்க் வியத்தகு அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் பயனாளர்களுக்கு விடுத்துள்ளார்.
AP
அது ட்விட்டர் Creator-கள் பணம் சம்பாதிக்கும் புதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி, ட்விட்டர் தளத்தில் Creators பதிவிடும் ட்வீட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை Creator-களுக்கு பங்கிட்டுக்குக் கொடுக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது.
5 மில்லியன் ஒதுக்கீடு
முதற்கட்டமாக, 5 மில்லியன் டொலர்கள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இத்திட்டம் அமுலுக்கு வரும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எனினும், இதில் பயன்பெற வேண்டுமானால் Creator ''Verified'' பெற்றிருக்க வேண்டும், அவர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ட்விட்டர் தளத்தில் 2 மணிநேரம் வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியை மஸ்க் அறிமுகம் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |