இலவச ஸ்டார்லிங்க் சேவை வழங்க தயராக இருந்தோம்:FAA நிராகரித்து விட்டதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டு
Elon musk offers free Starlink for FAA: இலவச ஸ்டார்லிங்க் சேவையை அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி நிராகரித்து விட்டதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலவச ஸ்டார்லிங்க் சேவை
வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து சேவைகளானது இடையூறுகளை சந்தித்து வருகிறது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த இடையூறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும், இவை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இடையூறுகள் மற்றும் சேவை முடக்கங்களை தவிர்க்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்கு(FAA) இலவச ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனம் முன்வந்ததாகவும் ஆனால் அவற்றை அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி நிராகரித்து விட்டதாகவும் SpaceX CEO எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டு இருந்த குறிப்பில், அமெரிக்க விமான சேவைகள் தற்போது சந்தித்து வரும் சவால்களை கருத்தில் கொள்ளும் போது, ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் முன்னரே தெரிவித்தது போல், FAA அமைப்பிற்கு இலவச ஸ்டார்லிங்க் சேவையை வழங்குவதாக போக்குவரத்து செயலாளர் சீன் டஃபியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார்.
ஆனால் தற்போது இது அவசியமானது என்பது நிரூபணமாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.