மார்க் ஜூக்கர்பெர்க்குடன் சண்டைக்கு தயார்: லெக்ஸ் பிரிட்மேனுடன் எலான் மஸ்க் தீவிர பயிற்சி
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கு எதிரான சண்டைக்கு தயாராகி வரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்
மார்க் ஜூக்கர்பெர்க்கு நிர்வகிக்கும் பேஸ்புக் மற்றும் எலான் மஸ்க் நிர்வகிக்கும் ட்விட்டர் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் உலகின் முன்னணி வலைதளங்களாக அறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து எலான் மஸ்க் மார்க் ஜூக்கர்பெர்க்கு எதிரான பல்வேறு கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க்கின் ஆதரவாளர் ஒருவர், ஜூக்கர்பெர்க்கிற்கு ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர், மேலும் சமீபத்தில் போட்டி ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளார் எனவே கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் கூண்டு சண்டை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார், அதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க் சண்டைக்கு தயார் மற்றும் இடத்தை தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளார்.
பயிற்சியில் எலான் மஸ்க்
மார்க் ஜூக்கர்பெர்க்கு எதிரான சண்டைக்கு தயாராகி வரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கணினி அறிவியலாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக லெக்ஸ் பிரிட்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் சில மணி நேரம் எலான் மஸ்க்குடன் சண்டை கலை பயிற்சியில் ஈடுபட்டேன், எலான் மஸ்க்கின் உடல் பலம் மற்றும் திறன் ஆகியவை வியப்பூட்டும் வகையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |