உலகின் முதல் நபர் இவர் தான்: $500 பில்லியன் நிகர சொத்து மதிப்பு எட்டிய எலான் மஸ்க்
உலகின் முதல் பணக்காரராக அறியப்படும் எலான் மஸ்க் தன்னுடைய நிதி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
$.500 பில்லியன் நிகர சொத்து மதிப்பு
உலக பணக்காரர்கள் தரவரிசையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் முதல் முறையாக $.500 பில்லியன்(ரூ 41.5 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்பை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நிகழ்நேர பில்லியனர்கள் கண்காணிப்பு கருவிகளின் தரவுகள் படி பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்ட தகவலில், $.500 பில்லியன் நிகர மதிப்பை புதன்கிழமை மாலை 3:30 மணிக்கு எலான் மஸ்க் அடைந்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த புதிய உச்சத்துக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
பார்ச்சூன் பத்திரிகை படி, எலான் மஸ்க் நீண்ட காலமாக உலகின் முதல் பணக்காரராக நீடித்து வருகிறார்.
அவரை தொடர்ந்து LVMH மோட் ஹென்னெஸ்ஸி லூயிஸ் விட்டன் உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட், ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |