ட்ரம்ப் பற்றி அப்படி பதிவிட்டதற்கு வருந்துகிறேன் - எலோன் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பதிவிட்ட சில ட்வீட்களுக்காக வருந்துவதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க்
டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதலைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் தொடர்ச்சியாக சில பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில் ட்ரம்பை கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார். இதற்கிடையில் 'தி அமெரிக்கன் பார்ட்டி' எனும் புதிய கட்சியையும் தொடங்கினார்.
நான் வருந்துகிறேன்
இந்த நிலையில் எலோன் மஸ்க் (Elon Musk) தற்போது வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டவை" என கூறியுள்ளார்.
எலோன் மஸ்க்கின் இந்த பதிவு அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு ட்ரம்ப் என்ன கூறுவார் என்பது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
I regret some of my posts about President @realDonaldTrump last week. They went too far.
— Elon Musk (@elonmusk) June 11, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |