புவி ஈர்ப்பு விசையை தோற்கடித்த எலான் மஸ்க்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான இரவு விருந்தில் நிகழ்த்திய அசாதாரணமான கைத்திறன் காட்சி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் வைரல் வீடியோ
வைரலான வீடியோவில், "எலான் மஸ்க், ஜனாதிபதி டிரம்புடன் உடன் உணவருந்தும்போது ஒரு விரலில் முட்கரண்டி மற்றும் குழிக் கரண்டிகளை சமநிலைப்படுத்துகிறார்.
இந்த வீடியோவானது, மேதை மற்றும் இரவு விருந்து பொழுதுபோக்கு! என்ற தலைப்புடன் X தளத்தில் வைரலானது.
Elon Musk effortlessly balances a fork and spoon on one finger while dining with Trump. Peak genius and dinner entertainment 😂🍴 pic.twitter.com/1kypBcCVQT
— SMX 🇺🇸 (@iam_smx) March 22, 2025
இந்த எளிய வித்தை, இணைய பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எலான் மஸ்க், "ஒரு விரல் நுனியில் ஒரு முட்கரண்டி மற்றும் இரண்டு கரண்டிகளை சமநிலைப்படுத்தினேன்," என தெரிவித்துள்ளார்.
இணையத்தில் பயனர் ஒருவர் "எலான் மஸ்க் புவி ஈர்ப்பு விசையை தோற்கடித்தார்" கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |